Header Logo
SLIC
செய்திகள்
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 24,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து நீர் விநியோகம்

Aug 28, 2026 - 11:16 PM

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 24,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து நீர் விநியோகம்
Mobitel Inner 1278
EDEX Inner

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள 26,457 குடும்பங்களைச் சேர்ந்த 84,545 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

இதன் காரணமாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கும் அந்த நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி, 24,144 குடும்பங்களைச் சேர்ந்த 75,734 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இவர்களில் அதிகளவானோர் மொனராகலை மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தின் 11,074 குடும்பங்களைச் சேர்ந்த 35,639 பேருக்கு குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,253 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 2,823 குடும்பங்களைச் சேர்ந்த 8,847 பேருக்கும், பொலன்னறுவை மாவட்டத்தில் 683 குடும்பங்களைச் சேர்ந்த 2,646 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278