Sep 3, 2026 - 09:10 PM

2026 ஆம் ஆண்டின் 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 6 ஆம் தரத்திற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் ஊடாக இணையவழி (Online) முறையில் சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கான உரிய திகதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ளன.



























