Sep 7, 2026 - 05:29 PM

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (07) மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

























