Sep 7, 2026 - 09:28 PM

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் உத்தியோகபூர்வ இலங்கை விஜயத்தை முன்னிட்டு, நாளை (08) முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என கொழும்பு போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதியில் பிரமுகர் பயணிக்கும் வீதிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது போக்குவரத்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் முக்கிய நேரங்கள் மற்றும் வீதிகள்:
செப்டம்பர் 08 (பி.ப1.30): கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரை
பயணப் பாதை: கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து துறைமுக வளாகம் வழியாக, என்.எஸ்.ஏ (NSA) சுற்றுவட்டம் ஊடாக தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரை.
செப்டெம்பர் 08 (இரவு 8.00 - 9.00): தாஜ் சமுத்ரா ஹோட்டலிருந்து 'இந்தியன் ஹவுஸ்' (Indian House) வரை
பயணப் பாதை: காலி முகத்திடல் சுற்றுவட்டம், கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தல சந்தி, செஞ்சிலுவைச் சங்க சந்தி, நூலக சுற்றுவட்டம், கிளாஸ் ஹவுஸ், நந்தா மோட்டார்ஸ், சுதந்திர சதுக்க சுற்றுவட்டம் வழியாக 'இந்தியன் ஹவுஸ்' சென்று, பின்னர் ஜே.ஓ.சி சந்தி, பிளவர் வீதி, லிபர்ட்டி சுற்றுவட்டம், மைக்கேல் சந்தி வழியாக காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக ஹோட்டல் வரை.
செப்டெம்பர் 09 (முற்பகல் 9.50 - 11.25): தாஜ் சமுத்ரா ஹோட்டலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை சென்று திரும்புதல்
பயணப் பாதை: காலி வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் சென்று, மீண்டும் அதே வீதி வழியாக தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரை.
செப்டெம்பர் 09 (பிற்பகல் 2.00 மணி முதல்): தாஜ் சமுத்ரா ஹோட்டலிருந்து பத்தரமுல்லை 'அபே கம' வளாகத்திலுள்ள இந்திய அமைதிப்படை நினைவிடம் வரை
பயணப் பாதை: காலி முகத்திடல் சுற்றுவட்டம், காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி, தர்மபால மாவத்தை, லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தல சந்தி, செஞ்சிலுவைச் சங்க சந்தியில் இடதுபுறம் திரும்பி ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, தாமரைத் தடாக சுற்றுவட்டம், ஹோர்ட்டன் பிளேஸ், ஹோர்ட்டன் - கின்சி சந்தி, டி.எஸ். சந்தி, மொடல் ஃபார்ம் சந்தி, காசல் வீதி, ஆயுர்வேத சந்தி, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்தை வழியாக பத்தரமுல்லை 'அபே கம' வளாகம் வரை.
பிற்பகல் 2.45 முதல் 3.45 வரை: பாதுகாப்பு அமைச்சுக்கு
பயணப் பாதை: ஜப்பான் நட்புறவு மாவத்தை சந்தி, கியன்ஹாம் சந்தி, த்ரீ பிரிட்ஜஸ் சந்தி, மகநெகும சந்தி, அறுக்பிட்டி சந்தி, அக்குரேகொட சுற்றுவட்டம் வழியாக.
பிற்பகல் 4.00 முதல் 4.30 வரை: பாராளுமன்ற வளாகத்திற்கு
பயணப் பாதை: அக்குரேகொட சுற்றுவட்டம், அறுக்பிட்டி சந்தி, மகநெகும சந்தி, த்ரீ பிரிட்ஜஸ் சந்தி, கியன்ஹாம் சந்தி, ஜயந்திபுர சந்தி வழியாக.
பிற்பகல் 4.35 முதல் 5.00 வரை: கங்காராம விகாரைக்கு
பயணப் பாதை: ஜயந்திபுர சந்தி, பொல்தூவ சந்தி, மின்சார சபை சந்தி, புத்கமுவ குறுக்கு வீதி சந்தி, முந்திரி கூட்டுத்தாபன சந்தி, வெலிகடை சந்தி, பண்டாரநாயக்கபுர சந்தி, ஆயுர்வேத சந்தி, ஆதர்ஷ கொவிபொல சந்தி, டி.எஸ். சேனாநாயக்க சந்தி, ஹோர்ட்டன் சுற்றுவட்டம், நூலக சந்தி, பிளவர் வீதி சந்தி, பித்தல சந்தி மற்றும் ஸ்ரீ ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை - ஜினரதன மாவத்தை சந்தி வழியாக.
பிற்பகல் 5.30: தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு
பயணப் பாதை: ஸ்ரீ ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை - ஜினரதன மாவத்தை சந்தி, ஸ்ரீ ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை - பெரஹரா மாவத்தை சந்தி, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக ரொட்டுன்டா சுற்றுவட்டம்
செப்டம்பர் 09 (இரவு 7.00 - 7.10): தாஜ் சமுத்ரா ஹோட்டலிருந்து துறைமுக வளாகத்திற்கு
பயணப் பாதை: காலி முகத்திடல் வீதி, பாலதக்ஷ மாவத்தை குறுக்கு வீதி சந்தி, காலி முகத்திடல் மத்திய வீதி - பாலதக்ஷ வீதி சந்தி, என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் மற்றும் கொழும்பு துறைமுக A 01 நுழைவாயில் வழியாக சென்று மீண்டும் அதே பாதையில் ஹோட்டல் வரை.
செப்டம்பர் 10 (முற்பகல் 9.00 - 9.10): தாஜ் சமுத்ரா ஹோட்டலிருந்து துறைமுக வளாகத்திலுள்ள ஹெலிபேட் (Helipad) வரை (நுவரெலியா செல்வதற்காக)
பயணப் பாதை: காலி முகத்திடல் வீதி, பாலதக்ஷ மாவத்தை குறுக்கு வீதி சந்தி, காலி முகத்திடல் மத்திய வீதி - பாலதக்ஷ வீதி சந்தி, என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் மற்றும் கொழும்பு துறைமுக A 01 நுழைவாயில் வழியாக.
இந்த வீதி கட்டுப்பாடுகளால் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கொழும்பு போக்குவரத்து பிரிவு, பொதுமக்கள் மற்றும் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

























