Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
தல அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட முதல்வர் விஜய்!

Sep 12, 2026 - 08:54 PM

தல அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட முதல்வர் விஜய்!
Mobitel Inner 1278

இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக்கொண்ட சம்பவம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழ் திரையுலகில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட இரு பெரும் நட்சத்திரங்கள், சர்வதேச விளையாட்டுக் களம் ஒன்றில் இணைந்து நின்று அன்பைப் பரிமாறிக்கொண்ட இந்த அரிய காட்சி, உலகெங்கிலும் உள்ள தமிழர்களையும் ரசிகர்களையும் பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

2026ஆம் ஆண்டுக்கான 'மிச்செலின் லீ மான்ஸ் கிண்ண' பந்தயத் தொடரின் 5ஆவது சுற்று லண்டன் சில்வர்ஸ்டோன் மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெறுகிறது. 

 

உலகம் முழுவதிலும் இருந்து 44 பந்தய சிற்றூந்துகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்டப் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக, ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பழைப்பாளராகவும் தமிழக முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டு பச்சைக் கொடி அசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.

 

மறுபுறம், சர்வதேசப் பந்தய வீரராக இந்தப் போட்டியில் களமிறங்கும் நடிகர் அஜித் குமார், LMP3 Pro/Am பிரிவில் 'Ajith RedAnt by Virage' அணியின் சார்பில் போட்டியிடுகிறார். அவர் தனது 16ஆம் எண் கொண்ட அதிநவீன 'Ligier' பந்தய சிற்றூந்தை இயக்கி இந்தச் சவாலான பந்தயத்தில் பங்கேற்கிறார்.

 

பந்தய மைதானத்துக்கு வருகை தந்த நடிகர் அஜித்தைக் கண்டதும், முதலமைச்சர் விஜய் விரைந்து சென்று அவரை நெகிழ்ச்சியுடன் ஆரத்தழுவி, அன்பு முத்தமிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அரசியல் மற்றும் விளையாட்டுத் துறைகளின் முக்கிய மைல்கல்லாக அமைந்த இந்த சந்திப்பு, இணையதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

 

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278