Sep 14, 2026 - 10:21 PM

அம்பலாங்கொடை - அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகந்த பகுதியில் உள்ள வீடொன்றிற்கு இன்று (14) இரவு பிரவேசித்த நபரொருவர், அங்கிருந்த பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட போதிலும், துப்பாக்கி இயங்காத காரணத்தினால் அத்தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் குறித்த வீட்டில் அந்தப் பெண் மட்டுமே இருந்துள்ளதுடன், நபரொருவர் வந்து கதவைத் தட்டியதை அடுத்து அவர் கதவைத் திறந்துள்ளார்.
அந்தக் கணமே செயற்பட்ட அந்த நபர், பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் துப்பாக்கி இயங்கவில்லை.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபர் அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண், போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பலமுறை சிறைவாசம் அனுபவித்த 'குடு நோனி' என்று அழைக்கப்படும் லியன கமகே அனோமா என்ற பெண் ஆவார்.
சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





























