Sep 16, 2026 - 09:52 PM

மட்டக்குளி பகுதியில் இன்று (16) இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரொன்று வீதியில் பயணித்த மேலும் பல வாகனங்களுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் குறித்த கார், 3 முச்சக்கரவண்டிகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது காயமடைந்த 6 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன





























