Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
மலையகம்
பேருந்துடன் மோதிய சைக்கிள் - சிறுவன் பலி!

Oct 7, 2026 - 10:32 AM

பேருந்துடன் மோதிய சைக்கிள் - சிறுவன் பலி!
Mobitel Inner 1278

நோட்டன் பிரிட்ஸ், ஹட்டன் பிரதான வீதியில் நோர்ட்டன்பிரிட்ஜ் பிக்போன் பகுதியிலேயே இன்று (07) காலை 7.15 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

நோர்ட்டன் பிரிட்ஜ் பிக்போன் பகுதியைச் சேர்ந்த நோர்ட்டன்பிரிட்ஜ் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து உடன், சைக்கள் மோதி, மாணவன் பேருந்தின் முன் சக்கர பகுதியில் சிக்கியுள்ளார். 

இதனால் காயமடைந்த மாணவனை பேருந்தின் சாரதியும், நடத்துனரும் இணைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்குவதற்காக நோர்ட்டன்பிரிட்ஜ் நகரை நோக்கி சைக்களில் சிறுவன் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பில் நோர்ட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

Mobitel 1278