Sep 14, 2026 - 10:43 AM -
0

இன்று (14) மேஷ ராசி அன்பர்களுக்கு தங்கி கிடந்த வேலைகளை ஒழுங்குப்படுத்தி முடிக்க முயற்சி செய்ய வேண்டிய நாள். பணியிடத்தில் குழப்பமான வேலைகளை முடிப்பதில் திட்டமிட்டு செயல்படவும். ஒப்பந்தங்கள், ஆவணங்கள், பண பரிவர்த்தனை போன்ற விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். இன்று உங்களுடைய செலவுகளை மறைப்பது செய்தனை செய்வது நல்லது. உங்களுடைய வீட்டு பொறுப்பு மற்றும் குடும்ப தேவைகளை ஈடுகட்ட பிறரின் உதவி தேவைப்படும். திருமணத்திற்கான முயற்சியில் இருப்பவர்களுக்கு, நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல வரம் அமைய வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் அமைதியான பேச்சை கடைபிடிப்பது நல்லது.
ரிஷப ராசி பலன்
ரிஷப ராசி சேர்ந்தவர்களுக்கு உங்களுடைய படைப்பாற்றல் மிக்க யோசனை, திட்டங்கள் பிறரை இருக்கக்கூடியதாக இருக்கும். விளம்பரத்துறையில், சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் உங்களுடைய புதிய அணுகுமுறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும். ஆடம்பர செலவுகள் மற்றும் அதிக ரிஸ்க் கொண்ட முதலீடுகள் அல்லது வர்த்தகத்தை தவிர்க்கவும். இன்று உங்களுடைய இயல்பான பேச்சு வசீகரமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரையும் மதித்து நடக்க வேண்டிய மாதம். பணி அழுத்தம் காரணமாக இன்று சோர்வாக இருப்பீர்கள்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசி சேர்ந்த நண்பர்களுக்கு குழு பணிகளில் வேலையை முடிக்க களத்தில் நிற்பதை விட, சில திட்டமிடலுடன் பின் நின்று செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் வதந்திகள் மற்றும் வீண் விவாதங்களில் இருந்து விலகி இருக்கவும். வீட்டு பராமரிப்பு, சொத்து அல்லது பட்ஜெட் தொடர்பான திட்டங்களில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத குடும்ப செலவுகள் தொடர்பாக அவசர கால நிதியை ஒதுக்கி வைக்கவும். இன்று உங்கள் உங்கள் துணையுடன் எதிர்கால தேவைகள் குறித்து பேசுவது நன்மை தரும். தேவை இல்லாத மன அழுத்தத்தை தவிர்த்து, சரியான அளவு ஓய்வு எடுக்க முயற்சிக்கவும்.
கடக ராசி பலன்
கடக ராசி நண்பர்களுக்கு இன்று உங்களுடைய தகவல் பரிமாற்ற திறன் சிறப்பாக இருக்கும். உங்களுடைய ஆலோசனை மற்றும் திட்டங்கள் செயலில் சமூகமான முடிவை தரும். சுயதொழில் செய்யக் கூடியவர்களுக்கு புதிய வருமான வழிகள் தென்படலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் விதிமுறைகளை தெளிவாக படிக்கவும். உங்கள் குடும்பத்தில் சில சிக்கல்களை தீர்க்க கனிவான பேச்சால் சரி செய்ய முடியும். இன்று விநாயகர் அருளால் உங்களுடைய தலைமைத்துவம் மிளிரும். உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும்.
சிம்ம ராசி பலன்
சிம்ம ராசியை சேர்ந்த அன்பர்களுக்கு உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற வருவாய் கிடைக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டிய நாள். சிலருக்கு ஊதிய உயர்வு, வணிக ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. இன்று அவசரப்பட்டு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். குடும்ப பொறுப்புகள் மற்றும் சேமிப்பு சார்ந்த விஷயங்களில் வெளிப்படை தன்மையுடன் பேசுவது உங்கள் உறவையும் வலுப்படுத்தும். இன்று அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வது தவிர்க்கவும். அவ்வப்போது நடப்பது, காலையில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டாம்.
கன்னி ராசிபலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு புதன் மற்றும் சந்திரனின் அமைப்பு சிந்தனை மற்றும், தெளிவை தரக்கூடியதாக இருக்கும். திட்டங்களை சரியாக முன்னெடுத்து செல்வீர்கள். இன்று உங்கள் செயல்பாடுகளில் உள்ள பிழைகள் திறக்க முயற்சிப்பீர்கள். தேவையற்ற செலவுகளை குறைத்து, சேமிப்பை ஒழுங்கு படுத்துவது திருப்தியை தரும். இன்று குடும்பத்தினரை குறை சொல்வதை தவிர்த்து, செயல்களை சரிபடுத்து முயற்சி செய்யவும். இன்று கண் எரிச்சல் அல்லது சோர்வு உங்களுக்கு தொந்தரவு தரும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி சேர்ந்த நண்பர்களுக்கு இன்று சுக்கிரனின் ஆதரவு, உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக காட்டும். அலுவலகத்தை பிறருடைய பணி விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நம்மை தரும். இன்று பயணம் அல்லது மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுடைய வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்படலாம். இன்று உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க தியானம் செய்வது, இரவில் சீக்கிரமாக தூங்கச் செல்வது நன்மை தரும்.
விருச்சிக ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு நண்பர்கள் அல்லது உடன் பணியாற்றுபவர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று குழு பணிகளில் ஒருங்கிணைப்பு நிறைந்திருக்கும். அவசர லாபத்தை பெறுவதில் கவனம் செலுத்தாமல், நீண்ட காலம் பலன் தரக்கூடிய இலக்குகள் மற்றும் முதலீடுகளில் கவனம் செலுத்தவும். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் சில எதிர்கால திட்டங்களை வகுக்க உகந்த நாள். உங்களுடைய உடல் ஆற்றல் நன்றாக இருக்கும். வேலைகளை சரியாக திட்டமிட நன்மை அதிகரிக்கும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு உங்களுடைய தலைமை பண்பு, நிர்வாக திறன் வெளிப்படும். பணியிடத்தில் இந்த விஷயம் உங்கள் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய வணிக ஒப்பந்தங்கள் தொடர்பாக சாதகமான விஷயங்கள் நடக்கும். அலுவலகம் தொடர்பான பதற்றத்தை உங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். இன்று உங்களுடைய துணையின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். இன்று வேலை பல காரணமாக முதுகு அல்லது ஈடுப தொடர்பான வலி தொந்தரவு தரும்.
மகர ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு கல்வி, சட்ட விரிவாகாரங்கள் தொடர்பாக சாதகமான பலன்களுக்கு கிடைக்கும். சில வெளியூர், வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் நல்ல பலன் பெறுவீர்கள். நீங்கள் முன்வைக்கக்கூடிய யோசனைகள் பாராட்டை பெற்று தரும். இன்று சில முக்கியமான விஷயங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் அனுபவசாலிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் புதிய விஷயங்களை செயல்படுத்த, ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். உடல் நலனை பராமரிப்பதில் கவனம் செலுத்தவும்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசி சேர்ந்த நண்பர்களுக்கு எந்த ஒரு முக்கிய விஷயங்களை முடிக்க ரகசிய திட்டங்களை கையாள்வது நல்லது. இன்று உங்களுடைய தனித்தன்மை, திறமை வெளிப்படும். கூட்டு முதலீடு, ஆவணங்களில் கையெழுத்திடுவது போன்ற விஷயங்கள் கவனம் தேவை. இன்று உங்களுடைய வெளிப்படையான மனநிலை உங்கள் துணையிடம் அதிக நம்பிக்கையை உருவாக்கும். குடும்பத்தின் தேவைகள் அதிகரிப்பது, எதிர்ப்பதை விட அதிக செலவுகள் போன்ற விஷயங்கள் உங்களுக்கு சற்று அச்சங்களை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் உடல்நிலை பராமரிப்பதற்கான மூச்சுப் பயிற்சி, தியானம் போன்ற விஷயங்கள் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளவும்.
மீன ராசி பலன்
மீன ராசி சேர்ந்த நண்பர்களுக்கு கூட்டுத் தொழில் மற்றும் வாடிக்கையாளர்களுடன் உறவு நல்ல நிலைக்கு வரும். உங்களுடைய உள்ளுணர்வும், நடைமுறை சிந்தனையும் இணைந்து சரியான முடிவு எடுக்க உதவும். புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். இன்று நீங்கள் ஆடம்பர செலவுகளை விட, அடிப்படை தேவைக்கான செலவுகளில் மட்டும் கவனம் செலுத்தவும். இன்று இல்லறத்தில் மகிழ்ச்சி பெருகும். பிறருடைய உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படவும். இன்று உங்களுக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் ஏற்படும். காரமான, எண்ணெய் பலகார உணவுகள் தவிர்ப்பதின் நன்மை தரும்.






































