Nov 8, 2026 - 09:21 PM

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 39 ட்ரோன்கள் மற்றும் 16 ஒலிவாங்கிகளை, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று (8) பறிமுதல் செய்துள்ளனர்.
குறித்த ட்ரோன்களை விமான நிலையத்திலிருந்து கொண்டு செல்வதற்கு இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் (ICL), தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRC) அனுமதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் (MoD) அனுமதி என்பன அவசியமாக இருந்தபோதிலும், பாராளுமன்ற உறுப்பினர் அந்த அனுமதிகளை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த பொருட்கள் சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
































