Nov 12, 2026 - 11:17 PM

இரண்டு மோட்டார் சைக்கிள்களை சுங்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான ஆவணங்களை வழங்குவதற்காக, 30,000 ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் கூறப்படும் சுங்கப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (12) பிற்பகல் 2:25 மணியளவில் இலங்கை சுங்கத் தலைமையகத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜப்பானிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை சுங்கத்தில் இருந்து விடுவிப்பதற்குத் தேவையான ஆவணங்களை முறைப்பாட்டாளருக்கு வழங்குவதற்காக, ஒரு மோட்டார் சைக்கிளுக்கு 15,000 வீதம் 30,000 ரூபா பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றமை அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.
சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
































