Nov 12, 2026 - 11:55 PM

பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹோமாகம தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ரஜித குருசிங்கவிற்கு எதிராக, கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்குப் பொலிஸார் இன்று (12) நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாட்சியாளர் இன்று முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகரை சாட்சியாளர் அடையாளம் கண்டுள்ளார்.
































