Nov 19, 2026 - 05:31 PM

சமூக மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் வெருகல், மூதூர் மற்றும் சேருவில பிரதேசங்களின் பதினைந்து குடும்பங்களுக்கு புதிய இல்லங்கள் கிடைத்திருந்தன
டோக்கியோ சீமெந்துக் குழுமம், கிழக்கு மாகாணத்தில், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்களிப்பை வழங்கும் அர்ப்பணிப்பின் பிரகாரம், தித்வா புயல் காரணமாக தமது இல்லங்களை இழந்த 15 குடும்பங்களுக்கு புதிய இல்லங்களை நிர்மாணித்து வழங்குவதற்காக ரூ. 100 மில்லியனை அர்ப்பணித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், வெருகல் மற்றும் சேருவில ஆகிய பிரதேச செயலக பகுதிகளில் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், மூன்று கட்டங்களாக அமைந்துள்ளது. இதனூடாக, சமூக அபிவிருத்தி மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிலைபேறான ஆதரவை வழங்கும் குழுமத்தின் அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டிருந்தது.
திட்டத்தின் முதற்கட்டமான மூதூர் மற்றும் வெருகல் பிரதேசங்களை உள்ளடக்கிய திட்டப்பணிகள் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டு, செப்டெம்பர் மாதம் ஐந்து குடும்பங்களுக்கு கையளிக்கப்பட்டிருந்தன. கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்னசேகர மற்றும் டோக்கியோ சீமெந்து குழும தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஆகியோரால் இந்த புதிய இல்லங்களின் சாவிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் இந்த சமீபத்திய சமூகப் பொறுப்புணர்வு முயற்சியானது, பயன்பெறும் குடும்பங்களின் சௌகரியமான வாழ்க்கையை உறுதிசெய்வதற்காக மின்சாரம் மற்றும் நீர்வசதி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய பதினைந்து ஒற்றை மாடி, இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட வீடுகளை வழங்க முன்வந்திருந்தது. இதேபோல், மேலும் ஐந்து வீடுகளை உள்ளடக்கிய இத்திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதுடன், அவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
கையளிப்பு வைபவத்தைத் தொடர்ந்து, சேருவில பகுதியில் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் ஆரம்பம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இங்கு மேலும் ஐந்து இல்லங்களை நிர்மாணிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சுபவேளையில், கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர். ஜயந்த லால் ரட்னசேகர மற்றும் டோக்கியோ சீமெந்து குழும தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டித் தரும் டோக்கியோ சீமெந்துக் குழுமத்தின் இந்த நற்செயல்திட்டத்திற்கு, மிகவும் தகுதியான குடும்பங்களை அடையாளம் காண்பதில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையும் திருகோணமலை மாவட்டச் செயலகமும் வசதிகளை ஏற்படுத்தியிருந்தன. டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்துத் தொழிற்சாலையின் சிவில் பொறியியல் குழுவின் மேற்பார்வையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், இந்தத் தொலைநோக்குடைய முயற்சியை வினைத்திறனாகச் செயல்படுத்துவதை உறுதிசெய்வதற்காக அரச அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் இயங்கியது. அனைத்து பதினைந்து வீடுகளினதும் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான பாதுகாப்பான வீடமைப்புக்கான உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், பாதிக்கப்பட்ட சமூகங்களின் நீண்டகால மீட்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இம்முயற்சி பங்களிப்பு செய்கின்றது.
இந்த வீடமைப்புத் திட்டத்தினூடாக, இலங்கையின் மாபெரும் சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் பெறுமதி சேர் கட்டுமான மூலப்பொருட்கள் விநியோகத்தரான டோக்கியோ சீமெந்து குழுமம், சமூகங்களை வலுப்படுத்தல், இடர் மீட்சிக்கு ஆதரவளித்தல் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய நிலையில் வாழும் குடும்பங்களில் நிலைத்திருக்கும், நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான தனது கூட்டாண்மை சமூக பொறுப்புக்கான அர்ப்பணிப்பை தொடர்ந்தும் உறுதி செய்கின்றது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணிப் பங்காளியாகத் திகழும் டோக்கியோ சீமெந்துக் குழுமத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வையை இம்முயற்சி மேலும் பிரதிபலிக்கின்றது. இது இலங்கையில் மீண்டும் முதலீடு செய்வதையும், தான் இயங்கும் சமூகங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது. குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதன் மூலம், வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் மக்களுக்குப் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் கண்ணியம் ஆகிய உணர்வுகளை மீட்டெடுக்க இக்குழுமம் உதவுகின்றது. இது தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்கள் தங்களின் பங்களிப்பை வழங்குவதற்கும் வழிவகுக்கின்றது.
































