Nov 19, 2026 - 07:01 PM

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழுள்ள சொரணாதோட்ட பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 4 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
சபையின் தற்போதைய தவிசாளர் ஜயலத் எதிரிமான்ன தலைமையில் நடைபெற்ற இந்த வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், அதற்கு ஆதரவாக 6 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்கெடுப்பின் போது, ஆளும் தேசிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்கள், பொதுஜன ஐக்கிய முன்னணியின் 2 உறுப்பினர்கள் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் ஒரு உறுப்பினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்ததன் காரணமாக, 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
































