Nov 19, 2026 - 05:51 PM

ஒன்றிணைவு, பாரம்பரிய பண்டிகைக் கலாசாரம் மற்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நல்விருப்பத்தின் கொண்டாட்டம்
இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட குழுமங்களில் ஒன்றான ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் முன்னணி சில்லறை விற்பனை வர்த்தக நாமமான ஆர்பிகோ சுப்பர்சென்டர், இந்த நத்தார் பண்டிகைக் காலத்தில் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்து, காலத்தால் அழியாத பாரம்பரியங்கள், அன்பு மற்றும் ஒன்றிணைவைக் கொண்டாடும் வகையில், அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'நத்தார் கேக் கலவை நிகழ்வு 2026' உடன் பண்டிகைக் காலத்தை வரவேற்கத் தயாராகியுள்ளது.
இந்த பாரம்பரிய கேக் கலவை நிகழ்வானது, ஆர்பிகோவின் நத்தார் கொண்டாட்டங்களின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. உலர் பழங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் முந்திரி-பருப்பு வகைகளின் நறுமணங்களை ஒன்றிணைத்து, ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நல்விருப்பத்தின் வண்ணமயமான கொண்டாட்டமாக இது அமைந்துள்ளது.
ஆர்பிகோவின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்ததுடன், பாரம்பரிய கேக் கலவை நிகழ்விலும் இணைந்து தங்களின் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நத்தார் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் பங்கேற்பானது, வாடிக்கையாளர்களுடன் இணைந்து பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுவதற்கும், நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியையும் நல்விருப்பத்தையும் பகிர்ந்து கொள்வதற்குமான ஆர்பிகோவின் அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.
நீண்டகாலமாகப் போற்றிப் பேணப்படும் நத்தார் பாரம்பரியத்தில் வேரூன்றிய இந்நிகழ்வானது, வளம், மகிழ்ச்சி மற்றும் பகிர்ந்தளிக்கும் நல்விருப்பத்தின் கொண்டாட்டமாக அமைகின்றது. வெறும் பண்டிகைக் காலச் சடங்கிற்கும் மேலாக, குடும்பங்களையும் சமூகங்களையும் நெருக்கமாக ஒன்றிணைக்கும் மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதற்கான ஆர்பிகோவின் அர்ப்பணிப்பை இந்நிகழ்வு பிரதிபலிக்கின்றது.
பல தலைமுறைகளாக இலங்கை மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இல்லறப் பெயராக விளங்கும் ஆர்பிகோ, தரம், சௌகரியம் மற்றும் சிறந்த பெறுமதி ஆகியவற்றை அர்த்தமுள்ள பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களுடன் ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களின் கொள்வனவு அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டின் கேக் கலவை நிகழ்வு, ஆர்பிகோ சுப்பர்சென்டர் கிளையெங்கும் சிறப்பு நத்தார் சலுகைகள், பருவகால உற்பத்திகள் மற்றும் ஈர்க்கக்கூடிய வாடிக்கையாளர் அனுபவங்களை உள்ளடக்கிய மற்றொரு உற்சாகமான பண்டிகைக் காலத்திற்கு வழிகோலுகின்றது.
ரிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் பலம் மற்றும் பாரம்பரியத்தின் பின்னணியுடன், புதுமை, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள் மற்றும் மறக்க முடியாத கொள்வனவு அனுபவங்கள் ஊடாக இலங்கை குடும்பங்களின் வாழ்க்கையை வளம்படுத்துவதில் ஆர்பிகோ தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், கொடுப்பதன் மகிழ்ச்சியைத் தழுவிக் கொள்ளவும், போற்றிப் பேணப்படும் பாரம்பரியங்களைக் கொண்டாடவும், அன்புக்குரியவர்களுடன் மறக்க முடியாத தருணங்களை உருவாக்கவும் ஆர்பிகோ வாடிக்கையாளர்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கின்றது. இதன் மூலம் குடும்பங்கள், பாரம்பரியங்கள் மற்றும் பண்டிகை மகிழ்ச்சி அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கின்றது.
































