Nov 19, 2026 - 06:22 PM

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் மூன்றாம் நாளான இன்று (19), தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. லஹிரு உதார (7), தினேஷ் சந்திமால் (0) மற்றும் கமிந்து மெண்டிஸ் (16) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
அதேநேரம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பசிந்து சூரியபண்டார 38 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் களமிறங்கிய அணித்தலைவர் குசல் மெண்டிஸ் (53), சொனால் தினுஷ (54) மற்றும் மிலான் ரத்நாயக்க ஆகியோர் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி அணியைப் பலப்படுத்தினர்.
குறிப்பாக, 8ஆவது இலக்கத்தில் களமிறங்கி அதிரடியாக களமிறங்கிய மிலான் ரத்நாயக்க 82 பந்துகளை எதிர்கொண்டு 60 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஆமிர் ஜமால் 3 விக்கெட்டுகளையும், மொஹமட் அப்பாஸ் மற்றும் ரசாவுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 325 ஓட்டங்களைப் பெற்று 227 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது.
































