Nov 19, 2026 - 09:28 PM

சென்னை - கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, 70 நாட்களாகத் தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
வி.எஸ்.பாபுவின் உடல் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அங்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் விஜய், உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அவரது உடல் நாளை மாலை நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி.எஸ். பாபுவின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
































