Nov 2, 2025 - 10:10 PM -
0
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் பலோடி மாவட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய கோர விபத்தில் குறைந்தபட்சம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மூவர் படுகாயம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள பலோடி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய பயணிகள், பிகானரில் உள்ள முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றான கோலாயத் தளத்தை தரிசித்துவிட்டு, ஜோத்பூரில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான சூர்சாகரில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன் லால் ஷர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். "இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

