Header Logo
செய்திகள்
காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் வான்பாயும் மட்டத்தில்

Aug 10, 2026 - 10:29 AM

காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் வான்பாயும் மட்டத்தில்
Mobitel inner

காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீரேந்து பகுதிகளில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக, இன்று (10) காலை வேளையில் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்கள் வான்பாயும் மட்டத்தை எட்டியுள்ளதாக அந்நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர். 

காசல்ரீ நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 1.2 அடி வரை எட்டியுள்ளதுடன், அந்நீர்த்தேக்கத்திற்கு கடந்த 24 மணிநேரத்தில் 25 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

அதேபோல் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கம் வான்பாயும் மட்டத்திற்கு 3.4 அடி வரை எட்டியுள்ளதுடன், கடந்த 24 மணிநேரத்தில் 29 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்த இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதனைத் தொடர்ந்து கென்யோன், லக்ஷபான, நவலக்ஷபான, பொல்பிட்டிய மற்றும் விமலாசுரேந்திர மின் உற்பத்தி நிலையங்களில் உச்ச கொள்ளளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதற்கிடையில், நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வான் கதவுகள் திறக்கப்படும் சாத்தியக்கூறுகள் நிலவுவதால், மஸ்கெலியா ஓயா ஆற்றின் இருமருங்கிலும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

MOST READ
02
நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த யூனியன் பிளேஸில் புதிய வணிக மையத்தை SDB வங்கி திறந்து வைத்துள்ளது   கொழும்பின் மிக முக்கியமான வணிகப்

நிறுவன மற்றும் வணிக வங்கிச் சேவைகளை விரிவுபடுத்த யூனியன் பிளேஸில் புதிய வணிக மையத்தை SDB வங்கி திறந்து வைத்துள்ளது கொழும்பின் மிக முக்கியமான வணிகப்

Aug 10, 2026 - 11:04 AM

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara