Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கைக் குற்றவாளிகள் - வௌியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Aug 22, 2026 - 08:19 PM

டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கைக் குற்றவாளிகள் - வௌியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

 

இதற்கமைய, பஸ் லலித் என்பவரை எதிர்வரும் திங்கட்கிழமை (24) நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சிறப்பு பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

டுபாயில் பல இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.

 

அவற்றில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கொண்ட ரஞ்சி, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள எல்டோ தர்மே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன், பொரளை வனாதமுல்ல பகுதியில் கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனாதே சத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறான பின்னணியில், கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட 'பஸ் லலித்' என்ற குற்றவாளி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளார்.

 

இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் அரச புலனாய்வு ​சேவை ஆகியவை அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

 

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

 

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வரவுள்ளனர்.

 

ஹங்வெல்ல பகுதியில் கப்பம் கோரியமை மற்றும் பல கொலைகளைச் செய்தமை தொடர்பில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278