Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
வணிகம்
கொழும்பு துறைமுக நகரம் ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பு

Oct 8, 2026 - 03:00 PM

கொழும்பு துறைமுக நகரம் ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பு
Mobitel Inner 1278

உயர்மட்ட ஈடுபாடுகளுடன் பிராந்திய பங்காண்மைகள் வலிமைப்படுத்தப்பட்டதுடன், கொழும்பு துறைமுக நகரத்தின் வளைகுடா முதலீட்டு மூலோபாயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை 

கொழும்பு துறைமுக நகரின் விசேட பொருளாதார வலயத்தில் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் இலங்கையின் முதலீட்டுப் பிரிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை சென். ரெகிஸ் அபுதாபியில் கொழும்பு துறைமுக நகரம் பிரத்தியேகமான முதலீட்டாளர் அமர்வாக கடந்த செப்டம்பர் 25 அன்று முன்னெடுத்திருந்தது. இதில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சிரேஷ்ட வியாபார தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனசார் பங்காளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அபுதாபி, மஸ்கட் மற்றும் தோஹா ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்படும் கட்டமைக்கப்பட்ட ஏழு நாள் வளைகுடா ரோட்ஷோ நிகழ்வின் பிரதான அங்கமாக இந்த அமர்வு அமைந்திருந்தது. 2026 ஆம் ஆண்டில் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த தொடர் உயர் மட்ட ஈடுபாடுகளைத் தொடர்ந்து, கொழும்பு துறைமுக நகரில் வளைகுடாவைச் சேர்ந்த முதலீட்டு சமூகத்தின் வளர்ந்து வரும் நாட்டத்தை தக்க வைத்துக் கொள்வதன் பிரதிபலிப்பாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. 

இந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரின் வளைகுடா சென்றடைவு நிகழ்ச்சித் திட்டத்தில் கிடைத்திருந்த வரவேற்பு மற்றும் இலங்கையின் முதலீட்டு பிரிவில் அபு தாபியின் நிறுவனசார் மற்றும் இறையாண்மை முதலீட்டு சமூகத்தின் உன்னிப்பான மற்றும் குறிப்பிடத்தக்களவு ஈடுபாடு போன்றவற்றுக்கான நேரடி பதிலளிப்பு நிகழ்வாக இந்த ரோட்ஷோ அமைந்திருந்தது. 

அபு தாபி அமர்வை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலுள்ள இலங்கை தூதரகம் கொழும்பு துறைமுக நகரத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. அமர்வை ஆரம்பிக்கும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான இலங்கையின் தூதுவர் பேராசிரியர். அருஷ குரே, பரஸ்பர நாடுகளுக்கிடையிலான உறவின் ஆழத்தன்மை மற்றும் அதில் கொழும்பு துறைமுக நகரத்தின் பங்கு குறித்து உரையாற்றியிருந்தார். “வளைகுடாவில் இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மாபெரும் நாடாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அமைந்துள்ளது. அத்துடன், இலங்கையின் ஆறாவது மிகப் பெரிய முதலீட்டாளராகவும் திகழ்கின்றது. இலங்கையின் பொருளாதார மாற்றம், நிகழ்ச்சி நிரலில் மாற்றம் மற்றும் வளைகுடா முதலீடுகளின் உண்மையான பங்காளராக திகழ்வது போன்றவற்றை கொழும்பு துறைமுக நகரம் பிரதிபலிக்கின்றது. தெற்காசியாவில் விஸ்தரிப்பை மேற்கொள்ள எதிர்பார்க்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய வியாபாரங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு, கொழும்பு துறைமுக நகரம் நவீன, சர்வதேச ரீதியில் வடிவமைக்கப்பட்ட சூழலமைப்பு ஆகியவற்றை பரீட்சியமான முறையில் வழங்குவதுடன், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஏற்கனவே காணப்படும் அம்சங்களில் நீடிப்பாகவும் அமைந்திருக்கும்.” என்றார். 

நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட DMCC இன் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி பேரியல் அஹமதி, சர்வதேச வர்த்தங்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்கள் அந்த மாற்றங்களில் ஆற்றும் பங்களிப்பு குறித்து தமது கருத்துகளை பகிர்ந்திருந்தார். “சர்வதேச வர்த்தகம் தெற்கு பிராந்தியத்தை நோக்கி நகர்வாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் 35% ஆன சர்வதேச வியாபாரங்கள் தெற்கை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதுடன், வடக்கு வர்த்தகம் 25% ஆகவே அமைந்திருக்கும். துபாய், சிங்கப்பூர் மற்றும் கொழும்பு போன்றன வியாபாரங்களுக்கு முன்நோக்கி நகர்வதற்கு முக்கியமான இணைப்பை வழங்கும் பகுதிகளாக அமைந்திருப்பதுடன், வியாபாரங்களுக்கு புதிய சந்தைகளை சென்றடைவதற்கும் வாய்ப்பை வழங்கும்.” என்றார். 

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ அமரசேகர அபுதாபியின் சர்வதேச முதலீட்டு மையம் மற்றும் இலங்கையின் சொந்த மூலோபாய அமைவு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை வெளிப்படுத்தியிருந்தார். “கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையிலான அதன் மூலோபாய இருப்பிடம், அதன் பிரமாண்டமான இறையாண்மை செல்வ நிதியம் (Sovereign Wealth Fund) மற்றும் அதன் முற்போக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு ஆகியவற்றால் அபுதாபி ஒரு முன்னணி உலகளாவிய வர்த்தக மற்றும் முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ளது. பல வழிகளில், இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இருப்பிடம் மற்றும் இயற்கை ஆழ்கடல் துறைமுகங்கள் போன்ற மூலோபாய நன்மைகளில் சிலவற்றை இலங்கையும் பகிர்ந்து கொள்கிறது. இந்தப் பகிரப்பட்ட புவியியல் பலம் நமது இரு நாடுகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது. கொழும்பு துறைமுக நகரம் என்பது ஒரு சாதாரண அபிவிருத்தித் திட்டம் மட்டுமல்ல. இது தெற்காசியாவை வளைகுடா, ஆசியா மற்றும் அதற்கும் அப்பால் இணைக்கும் வகையில், வர்த்தகங்களுக்கான ஒரு நடுநிலையான மற்றும் முழுமையாக இணைக்கப்பட்ட தளமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மூலோபாய தேசியச் செயற்திட்டமாகும்.” என்றார். 

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரேவன் விக்ரமசூரிய, ஒருங்கிணைந்த ஒருமுகச் சேவை மாதிரி, அந்நியச் செலாவணியில் இயங்கும் வர்த்தகச் சூழல், முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஷரீஆ சட்டத்திற்கு அமைவான நிதிச் சட்டக்கட்டமைப்பு உள்ளிட்ட SEZ இன் ஒழுங்குமுறை சட்டக்கட்டமைப்பு, வளைகுடா முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியவாறு, கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டு வேகம் குறித்த புதுப்பித்தல்களைப் பங்கேற்பாளர்களுக்கு அவர் வழங்கினார். இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை நிறைவுசெய்து உரைநிகழ்த்திய கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் வர்த்தகப் பணிப்பாளர் ராதிகா ஒபேசேகர, இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 

கொழும்பு துறைமுக நகரத்தின் வளைகுடா ரோட்ஷோவின் முக்கியத்துவம் தொடர்பில் CHEC Port City Colombo (Pvt) Ltd. இன் முகாமைத்துவப் பணிப்பாளர் சியொங் ஹொங்ஃபெங் குறிப்பிடுகையில், “மஸ்கட் முதல் அபுதாபி மற்றும் தோஹா வரை இந்த முதலீட்டாளர் ரோட்ஷோ நிகழ்வில் நாம் கண்டுள்ள ஈடுபாட்டின் ஆழமானது, தெற்காசியாவின் வளர்ச்சிப் பயணத்தை அணுகுவதற்கு கொழும்பு துறைமுக நகரம் ஒரு நம்பகமான மற்றும் பரிச்சயமான தளத்தை வழங்குகிறது என்பதை வளைகுடா முதலீட்டாளர்கள் அதிகளவில் அங்கீகரிப்பதைப் பிரதிபலிக்கிறது. இந்த உரையாடல்களை உறுதியான முதலீட்டுப் பங்காண்மைகளாக மாற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்றார். 

அபுதாபி மாநாட்டிற்கு முன்னதாக, மஸ்கட்டில் உயர்மட்ட இருதரப்புச் சந்திப்புகளின் தொடர் ஒன்று நடைபெற்றது. அதில் கொழும்பு துறைமுக நகரத் தூதுக்குழுவினர், கஸாயின் பொருளாதார நகரம், ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் (OCCI), மற்றும் வர்த்தக, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இத்தூதுக்குழுவினர், கஸாயின் பொருளாதார நகரத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் சலீம் பின் சுலைமான் அல் துஹ்லி, ஓமான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஷேக் பைசல் பின் அப்துல்லா அல் ரவாஸ், மற்றும் வர்த்தக, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அரச ஆலோசகரும், கிம்ஜி ராம்தாஸ், நிறுவனத்தின் பணிப்பாளருமான பங்கஜ் கிம்ஜி, வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதி அமைச்சர் காலிப் பின் சயீத் பின் மஜித் அல் மாமரி ஆகியோரைச் சந்தித்தனர். 2026 ஜுன் மாதம் கொழும்பு துறைமுக நகரத்தின் மஸ்கட் முதலீட்டாளர் மாநாடு மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் கொழும்பு துறைமுக நகரத்திற்கான பரஸ்பர தூதுக்குழுவின் விஜயம் ஆகியவற்றின் மூலம் அமைக்கப்பட்ட வலுவான அடித்தளத்தைக் கட்டியெழுப்பும் வகையில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், ஓமான்-தெற்காசிய முதலீட்டு மற்றும் வர்த்தகப் பாதை மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் SEZ இன் கட்டமைப்பிற்குள் ஓமானிய வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது பிரசன்னத்தை நிறுவுவதற்கான வழிகள் குறித்து இக்கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. 

கத்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முதலாவது பிரதித் தவிசாளர் மொஹமட் பின் அகமட் பின் த்வார் அவர்களுடனான முக்கிய சந்திப்புடன் இந்த முதலீட்டாளர் ரோட்ஷோ தோஹாவில் நிறைவுற்றது. இது கத்தாரின் வணிக மற்றும் முதலீட்டுச் சமூகத்துடனான கொழும்பு துறைமுக நகரத்தின் ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய படியாக அமைந்தது. கத்தார் நாட்டிற்கான இலங்கைத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பயனுள்ள கலந்துரையாடலுக்கு, கத்தாரிற்கான இலங்கைத் தூதுவர் சித்தாரா கான் தலைமை தாங்கினார். 

தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பிரத்தியேகக் கலந்துரையாடல்களை நடத்திய இத்தூதுக்குழுவினர், கத்தார்-இலங்கை வணிக பேரவை, இலங்கை ஒருங்கிணைப்புக் குழு (SLCC), மற்றும் இலங்கை வணிக மற்றும் தொழில்வல்லுநர்கள் பேரவை (SLBPC) ஆகியவற்றின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த உயர்மட்ட ஈடுபாடுகள், கத்தாரில் கொழும்பு துறைமுக நகரத்தின் தொடர்ச்சியான தொடர்பாடல்களை மேலும் ஆழப்படுத்தியிருப்பதுடன், நிறுவன மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்தி, நிலையான உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் எல்லை கடந்த முதலீட்டுத் தொடர்புகளுக்கான புதிய வழிகளையும் உருவாக்கியுள்ளன. 

கொழும்பு துறைமுக நகரத்தில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு, www.portcitycolombo.lk ஐ பார்க்கவும். முதலீட்டு வசதி வாய்ப்பளிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் விடயங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.portcitycolombo.gov.lk ஐ பார்க்கவும்.


MOST READ

காணொளி
இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

Mobitel 1278