Oct 8, 2026 - 03:24 PM

Vietjet, கொழும்பு – Ho Chi Minh City இடையிலான விமானச் சேவையில், வரிகள் மற்றும் கட்டணங்கள் உட்பட 90 அமெரிக்க டொலர் முதல் ஆரம்பமாகும் Eco ரகக் பயணச்சீட்டுகளையும், வரிகள் மற்றும் கட்டணங்கள் நீங்கலாக Deluxe அடிப்படைக்கட்டணத்தில் 20% தள்ளுபடியையும் வழங்கும் மூன்று நாட்கள் கொண்ட சிறப்பு விற்பனையை 2026 ஒக்டோபர் 8 முதல் 10 ஆம் திகதி வரை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது. கொழும்பு வழியிலான Ho Chi Minh City – மாலைதீவு இடையிலான புதிய சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், தனது சர்வதேச விமானச் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக இந்தச் சலுகையை Vietjet அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது இலங்கைப் பயணிகளுக்கு மாலே நகருக்கான புதிய வான்வழி இணைப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
தற்போது முதல் 2026 ஒக்டோபர் 10 ஆம் திகதி 21:30 (இலங்கை நேரம்) வரை இந்த விசேட சலுகையை அனுபவிக்க முடியும். www.vietjetair.com மற்றும் Vietjet Air mobile app ஆகியவற்றில் கொழும்பு - Ho Chi Minh City விமானச் சீட்டுகளை முற்பதிவு செய்கையில் இந்தச் சலுகையைப் பெறலாம். இச்சலுகை Vietjet வலையமைப்பிலுள்ள ஏனைய சர்வதேச மற்றும் வியட்நாமின் உள்நாட்டு விமானச் சேவைகளுக்கும் பொருந்தும் என்பதுடன், 2026 ஒக்டோபர் 8 முதல் 2027 செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதிக்கான பயணங்களுக்கு இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் (முன்பதிவு செய்ய முடியாத குறிப்பிட்ட விழா/பயண உச்சக் காலங்கள் பொருந்தக்கூடும்).
தெற்காசியாவில் தனது பிரசன்னத்தை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு வழியிலான புதிய Ho Chi Minh City – மாலைதீவு விமானச் சேவையை 2026 டிசம்பர் 5 ஆம் திகதி Vietjet அறிமுகப்படுத்தவுள்ளது. இது விமான நிறுவனத்தின் சர்வதேச வலையமைப்பில் கொழும்பின் முக்கியத்துவத்தை மேலும் மேம்படுத்துகின்றது. செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று இருவழிச் சேவைகளாக (Round-trip flights) இயக்கப்படவுள்ள இப்புதிய சேவையானது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலே நகரைச் சென்றடைவதற்கான புதிய வாய்ப்பை இலங்கையர்களுக்கு வழங்குவதுடன், சர்வதேசப் பயணிகள் இலங்கை, மாலைத்தீவு மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளை ஒரே பயணத்தில் இணைத்துப் பார்வையிடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துகின்றது. தற்போதைய சிறப்புச் சலுகையிலும் சேர்க்கப்பட்டுள்ள இச்சேவைக்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
மேலும், Vietjet தனது சர்வதேசச் சேவை வலையமைப்பை மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு விரிவுபடுத்தும் வகையில், ஹனோயிலிருந்து Almaty (கசகஸ்தான்) மற்றும் ஹனோயிலிருந்து Prague (செக் குடியரசு) ஆகிய நகரங்களுக்கான விமானச் சேவைகளை 2026 ஒக்டோபர் 10 ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இம்மாத பிற்பகுதியில், ஹோ சி மின் நகரத்தை பிலிப்பீன்ஸின் Clark நகரத்துடனும் தாய்லாந்தின் சியாங் மாயி நகரத்துடனும் இணைக்கும் மேலும் இரு புதிய சேவைகள் தொடங்கப்படவுள்ளன. இந்த புதிய வான்வழித் தடங்கள், நெகிழ்வுத்தன்மை கொண்ட பயண அட்டவணைகள் மற்றும் ஈர்க்கக்கூடிய பயணக் கட்டணங்களுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க ஐரோப்பிய நகரங்களையும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் துடிப்பான சுற்றுலாத் தலங்களையும் எளிதாகப் பார்வையிடுவதற்கான வாய்ப்பைப் பயணிகளுக்கு வழங்குகின்றன.
ஒவ்வொரு Vietjet விமானப் பயணத்தின்போதும், பயணிகள் Pho, Banh mi மற்றும் வியட்நாமிய iced milk coffee உட்படப் புதிதாகத் தயாரிக்கப்பட்ட வியட்நாமிய மற்றும் சர்வதேச சிறப்பு உணவுகளை சுவைக்க முடியும். நவீன, எரிபொருள் திறனுள்ள விமானங்களில் Vietjet இன் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புள்ள பணிப்பெண்கள் மற்றும் பணியாளர்களால் இவை வழங்கப்படுகின்றன. மேலும், 10,000 மீற்றர் உயரத்தில் கலை மற்றும் கலாசார அனுபவங்களை வான்வழியில் வழங்கி, ஒவ்வொரு பயணத்திற்கும் Vietjet ஒரு தனித்துவமான சிறப்பைச் சேர்க்கின்றது.
Vietjet பற்றி:
புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது.
Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் 'சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம்' எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com































