Oct 8, 2026 - 03:54 PM

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நிராகரிக்குமாறு பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதன்படி, தற்போதுள்ள குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த வழக்கை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன உத்தரவிட்டதாக ‘அத தெரண’ நீதிமன்றச் செய்தியாளர் தெரிவித்தார்.































