Oct 8, 2026 - 03:29 PM

இலங்கையின் முன்னணி மோட்டார் காப்புறுதி நிறுவனமும், பொதுக் காப்புறுதி துறையில் நம்பிக்கைக்குரிய முன்னோடியுமான ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் (SLICGL), 2026 ஜூலை 26 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்ற கதிர்காமம் எசல பெரஹரா விழாவின்போது பக்தர்களுக்கும் வருகையாளர்களுக்கும் பல்வேறு சேவைகளை வழங்கி அவர்களின் பயணப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது.
விழா நடைபெறும் காலப்பகுதியில், எதிர்பாராத வாகனக் கோளாறுகள் பக்தர்களின் யாத்திரைப் பயணத்தை பாதிக்காத வகையில், SLICGL தனது சேவைக் குழுவை நிகழ்விடத்தில் தயார் நிலையில் வைத்திருந்தது. வாகனக் காப்புறுதியின் மைய வாக்குறுதியான, தேவையான நேரத்தில் துணைநிற்றல் என்ற அர்ப்பணிப்பை நடைமுறையில் வெளிப்படுத்திய இந்நடவடிக்கை, பக்தர்களின் கதிர்காமப் பயணம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்தது. மேலும், இலங்கையின் முதல்தர மோட்டார் காப்புறுதிதாரரான SLICGL நிறுவுனம், 2026 ஜூலை 26 முதல் 29 வரை நடைபெற்ற கதிர்காமம் எசல பெரஹரா விழாவை முன்னிட்டு, தனது Motor Plus வர்த்தக நாமத்தை மையப்படுத்திய விரிவான செயற்பாட்டையும் வெற்றிகரமாக முன்னெடுத்தது. வர்த்தகநாம அறிமுக நடவடிக்கைகளுடன் இணைந்து, சமூகப் பொறுப்புணர்வு, வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு, பொதுமக்கள் சேவை மற்றும் பக்தர்களுக்கான நேரடி ஆதரவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் முன்னணி மோட்டார் காப்புறுதி நிறுவனமாகப் பெற்றுள்ள அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாகனக் கோளாறுகளை எதிர்கொண்ட பக்தர்களுக்கும் வருகையாளர்களுக்கும் இலவச வாகன இழுவை (Towing) சேவையை SLICGL அறிமுகப்படுத்தியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த சேவையின் மூலம் ஏராளமான வாகனங்கள் பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்பட்டதுடன், பலருக்கு உடனடி சாலை ஓர உதவிகளும் வழங்கப்பட்டன. இதன் மூலம், பக்தர்கள் தங்களது யாத்திரையை பாதுகாப்பாகவும் இடையூறின்றியும் தொடர முடிந்தது.
கதிர்காமம் தேவஸ்தானத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்த சேவை, SLICGL ஒரு காப்புறுதி நிறுவனமாக மட்டுமன்றி, மக்களின் வாழ்வையும் பயணங்களையும் பாதுகாக்கும் நம்பிக்கைக்குரிய துணைநிறுவனமாக திகழ்வதை மீண்டும் உறுதிப்படுத்தியது.
இந்நிகழ்வின் மூலம் Motor Plus வர்த்தக நாமம் ஆயிரக்கணக்கான இலங்கையர்களை நேரடியாக சென்றடைந்தது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த விசேட அனுபவ மையத்தை சுமார் 10,000 பேர் பார்வையிட்டனர். அங்கு தொடர்பாடல் விளையாட்டுகள், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பயன் காப்புறுதி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், நடத்தப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கல் நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், சுமார் 4,000 வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, சாலைப் பாதுகாப்பு குறித்த செய்தி பரவலாக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த முயற்சி, வாகன ஓட்டிகளுக்கு நடைமுறை ரீதியான உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களைப் பாதுகாப்பது, சாலைப் பாதுகாப்பை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக முன்னிறுத்துவது மற்றும் கலாசார, சமூக நிகழ்வுகளின் வழியாக மக்களிடையே நம்பிக்கையை வலுப்படுத்துவது என்ற SLICGL நிறுவனத்தின் பரந்த நோக்கத்தை பிரதிபலிக்கிறது.
கதிர்காமத்தில் SLICGL-இன் பங்கேற்பு வெறும் வர்த்தக அறிமுக நடவடிக்கையாக அல்லாமல், சமூகத்திற்கு நேரடியாகப் பயனளிக்கும் சேவையாக அமைந்தது. இலவச வாகன இழுவைச் சேவை மற்றும் சாலைப் பாதுகாப்பு உதவிகள் மூலம், காப்புறுதி பாதுகாப்பைத் தாண்டியும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் தாம் உறுதியாக நிற்பதை SLICGL மீண்டும் நிரூபித்துள்ளது. நம்பகத்தன்மை, அர்ப்பணிப்பு மற்றும் பொதுமக்களுக்கான சேவை ஆகியவற்றின் மூலம், இலங்கையின் நம்பர் 1 மோட்டார் காப்புறுதி நிறுவனமாக தனது முன்னணித் தகுதியை SLICGL மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு 011 235 7357 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம் அல்லது www.slicgeneral.com இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.































