Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
மலையகம்
டிக்கோயா தோட்டத்தில் இரவில் அரங்கேறிய அதிர்ச்சி

Oct 8, 2026 - 03:15 PM

டிக்கோயா தோட்டத்தில் இரவில் அரங்கேறிய அதிர்ச்சி
Mobitel Inner 1278

ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கண்ணாடித் துண்டுகள், யூரியா பைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்களை, ஹட்டன் – டிக்கோயா நகர சபை ஊழியர்கள் சிலர் டிக்கோயா தோட்டப் பகுதிக்குக் கொண்டு சென்று கொட்டியதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

நேற்று (07) இரவு சுமார் 7 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், கழிவுப் பொருட்கள் தோட்டப் பகுதியில் கொட்டப்படும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி (CCTV) கேமராக்களிலும் பதிவாகியுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பாக டிக்கோயா தோட்ட நிர்வாகத்தினரால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது. 

ஹட்டன் நகரில் ஏற்கனவே கடுமையான கழிவுப் பிரச்சினை நிலவிவரும் சூழலில், நகரில் சேகரிக்கப்படும் கழிவுகளைத் தோட்டப் பகுதிகளில் கொட்டுவதன் மூலம், ஹட்டன் பிரதேசத்திலுள்ள தேயிலைத் தோட்டங்கள் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

எனவே, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கழிவுகளைச் சட்டவிரோதமாக அகற்றுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதுடன், ஹட்டன் நகரில் நிலவும் கழிவுப் பிரச்சினைக்கு முறையான மற்றும் நீடித்த தீர்வொன்றை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


MOST READ

காணொளி
இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

Mobitel 1278