Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு தொடரும் எதிர்ப்புகள்

Oct 8, 2026 - 03:03 PM

ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டமைக்கு தொடரும் எதிர்ப்புகள்
Mobitel Inner 1278

கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை அகற்றுவதை எவ்வகையிலும் அங்கீகரிக்க முடியாது என மக்கள் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டு அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். 

பௌத்த துறவிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் போது, பௌத்த சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பாரம்பரியங்கள் மற்றும் ஒழுக்க விதிகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும். 

அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளும் எப்போதும் பௌத்த தர்மத்திற்குரிய பாரம்பரியங்களை மதிக்க வேண்டும் என மக்கள் கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்துகிறது. 

பௌத்த தர்மத்தின் ஒழுக்க விதிகள் தொடர்பில் செயற்படுவதற்கான முப்பீட மகாநாயக்க தேரர்களின் உரிமை எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமது கொள்கை என அவ்வறிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

ஒழுக்க பீடகத்தின்படி, துறவி ஒருவரின் காவி உடையை அகற்றுவதற்கான அதிகாரம் அவர் துறவறம் பூண்ட நிகாயவுக்கு மட்டுமே உண்டு. 

அதற்குப் புறம்பாக எந்தவொரு தரப்பினராலும் அல்லது நபரினாலும் தேரரின் காவி உடையை அகற்ற முடியாது என மக்கள் கூட்டு எதிர்க்கட்சி அமைப்பாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஞானசார தேரரின் காவி உடையை அகற்றி, கைதி உடையை அணிவிக்க எடுத்த நடவடிக்கை சர்ச்சைக்குரிய செயலாகும் என்பதுடன், தூரநோக்கின்றி தன்னிச்சையாகச் செயல்பட்டமையினாலேயே இது தொடர்பில் நாலாபுறமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவின் மூலம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமையையும் மக்கள் கூட்டு எதிர்க்கட்சி நினைவூட்டுகின்றது. 

எந்தவொரு தரப்பும் பௌத்த மதம் தொடர்பில் தன்னிச்சையாகச் செயல்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.


MOST READ

காணொளி
இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

Mobitel 1278