threads

கிரிக்கெட் ரசிகர்களுக்காக...


சுருக்கம்

ஐ.சி.சி T20 உலகக் கிண்ணத்தின் 10 வது தொடர் தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இந்தத் தொடர் 2026 பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறுகிறது.

LIVE NEWS
133 Updates
4 hours ago

வீரர்களுக்கு அபராதம் விதித்த பாக். கிரிக்கெட் வாரியம்!

March 2, 2026 - 04:45 PM

threads

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண 2026 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியது. நடப்பு டி20 தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாதது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

இதைத் தொடர்ந்து அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த நிலைமை சற்று மாறத் தொடங்கிய நிலையில், டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் அணி மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது. 

இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, உலகக் கிண்ண தொடரில் மோசமான ஆட்டம் காரணமாக சூப்பர் 8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, மோசமான ஆட்டம் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது வீரர்களுக்கு இந்திய மதிப்பில் 16 லட்சத்து 28 ஆ ... see more

1 day ago

இந்தியாவுக்கு மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த வெற்றி இலக்கு!

March 1, 2026 - 08:51 PM

threads

டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர் 8' சுற்றின் 52ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணிக்கு 196 ஓட்டங்களை வெற்றி இலக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயித்துள்ளது.

 

இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ்  மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. 

 

இரு அணிகளுக்கும் இது ஒரு 'வாழ்வா சாவா' போட்டியாகும். இந்த வெற்றியே அரையிறுதிக்கு முன்னேறும் அணியைத் தீர்மானிக்கும் என்பதால், இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்து, மேற்கிந்தியத் தீவு ... see more

1 day ago

தென்னாப்பிரிக்க அணிக்கு 154 வெற்றியிலக்கு!

March 1, 2026 - 04:50 PM

threads

டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான 'சூப்பர் 8' சுற்றின் 51 ஆவது லீக் ஆட்டத்தில் இன்று (26) தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. 

டெல்லி மைதானத்தில் இடம்பெற்று வரும் இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பில் அதிகபட்சமாக அணி தலைவர் Sikandar Raza 73 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் தென்னாப்பிரிக்கா அணி சார்பில் Kwena Maphaka மற்றும் Corbin Bosch தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இந்நிலையில் 154 என்ற வெற்றியிலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி துடுப்பாடவுள்ளது.

1 day ago

பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சனத்தின் பதில்!

March 1, 2026 - 12:33 AM

threads

இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று (28) நடைபெற்ற போட்டியின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளாரா என்பது குறித்து சனத் ஜயசூரிய கருத்து வெளியிட்டுள்ளார். 

இன்று நடைபெற்ற போட்டியின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த அவர், தான் முன்னரே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும், தனது ஒப்பந்தக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

இருப்பினும், இது குறித்து இதுவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும், இது தொடர்பாக கிரிக்கெட் நிறுவனத்துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய, 

இந்த பதவியை வேறு யாருக்காவது வழங்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து ... see more

1 day ago

இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

February 28, 2026 - 10:52 PM

threads

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 

பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

இந்நிலையில் 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 

இலங்கை அணி சார்பில் தசுன் சானக்க 76 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

இப்​போட்டியில் இலங்கையை பாகிஸ்தான் அணி வீழ்த்தியிருந்த போதிலும் அந்த அணியால் அரையிறுதிக்காக வாய்ப்பை பெற முடியவில்லை. 

அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமானால், இலங்கை அணியை 147 ஓ ... see more

1 day ago

பாகிஸ்தான் வௌியே நியூசிலாந்து உள்ளே

February 28, 2026 - 10:36 PM

threads

2026 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் இருந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லாமல் வௌியேறியுள்ளது. 

இன்று (28) இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

இந்நிலையில் 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாடவுள்ளது. 

எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமானால், இலங்கை அணியை 147 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும் அந்த இலக்கையும் மீறி இலங்கை அணி துடுப்பாடி வருவதால் பாகிஸ்தான் அணி வௌியேறியுள்ளது. 

அத்துடன் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 days ago

இலங்கைக்கு 213 வெற்றியிலக்கு

February 28, 2026 - 08:52 PM

threads

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன. 

பல்லேகலை இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

இந்நிலையில் 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாடவுள்ளது. 

எவ்வாறாயினும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தெரிவாக வேண்டுமானால், இலங்கை அணியை 147 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு செய்தால் மாத்திரமே பாகிஸ்தான் அணியால் உலக கிண்ண அரையிறுதிக்கு தெரிவாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

3 days ago

டி20 உலகக் கிண்ணத்தில் அதிகமுறை ஆட்ட நாயகன் விருது!

February 27, 2026 - 06:30 PM

threads

இந்தியா - சிம்பாப்வே இடையிலான ஆட்டம் நேற்று (26) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இந்தியா 256 ஓட்டங்களை குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் அரைசதம் விளாசினார். பந்து வீச்சில 3 ஓவர்கள் வீசி 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும், ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

டி20 உலகக் கிண்ண இது அவரின் 3 ஆவது ஆட்ட நாயகன் விருது ஆகும். அதன்மூலம் ரோகித் சர்மா, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோருடன் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார். 

விராட் கோலி 8 முறை ஆட்ட நாயகன் விருது வென்று முதலிடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்று 2 ஆவது இடத்தில் உள்ளார். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மட்டுமே தற்போது விளையாடி வருகின்றனர்.

3 days ago

இந்திய வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

February 27, 2026 - 10:23 AM

threads

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் காலமானார். 

நான்காம் நிலை கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள வைத்தியசாலையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 

இந்த துயரச் செய்தியை இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் உறுதிப்படுத்தினார். 

இந்த இழப்பு ரிங்கு சிங்கிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய துயரமாகும். 

கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் வெற்றிப் பயணத்தின் பின்னணியில் அவரது தந்தையின் தியாகம் மிகப் பெரிய காரணமாக இருந்தது. 

அலிகரில் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகத்தராக பணியாளராக பணியாற்றிய அவர், குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தாலும், மகன் கிரிக்கெட்டில் முன்னேற வேண்டும் என்ற கனவை ஒருபோதும் கைவிடவில்லை என பாடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


காணொளி
சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு முழுமையான எதிரானவர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

சிசிடிவி காட்சிகளால் சிக்கிய நபர்!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு


ஸ்ஷோட்ஸ்
சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்!

கிளிநொச்சியில் கடும் பனிமூட்டம்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கச்சதீவு வருடாந்த திருவிழாவிற்கு தயாராகும் பக்தர்கள்!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை!

கூடாரங்களில் முடங்கிய வாழ்க்கை!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

வயல்வௌிக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்!

கொக்கட்டிச்சோலை குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!

கொக்கட்டிச்சோலை குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை!

நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!

நகைக்கடையில் நூதன முறையில் திருடிய நபர் கைது!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

எதிர்க்கட்சியினரின் கதை இத்தோடு முடிந்துவிடும்!

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு

தலவாக்கலை நகரில் நகை கடையில் நூதன திருட்டு