Oct 22, 2026 - 12:28 PM

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவரிடமிருந்து 1 கிலோகிராம் 45 கிராம் ஐஸ் போதைப்பொருள், 1 கிலோகிராம் 86 கிராம் ஹெரோயின், ஒரு மின்னணு தராசு, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8 இலட்சத்து 50,000 ரூபாய் பணம் மற்றும் ஒரு கைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என்பதுடன், அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

































