Oct 22, 2026 - 12:41 PM

பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி 5 வாரங்கள் கடந்துள்ள நிலையில் டாஸ்குகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. 5 ஆவது வார இறுதியில் சாந்தினி வோட்டிங் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்பாராத விதமாக ராகவ் அறுவை சிகிச்சை காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கடந்த வாரம் நடைபெற்ற டைமண்ட் திருடும் டாஸ்க்கில் அட்டகாசமாக விளையாடி ரசிகர்கள் மனதை வென்றார் டிடிஎஃப் வாசன். அதனால் இந்த வாரம் நன்றாக விளையாடும் டாஸ்க்கை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருந்தனர். அதன் படி வீட்டை இரண்டாக பிரித்து ப்ளூ, ரெட் என இரண்டு அணிகளாக 8 - 8 பேர் பிரிந்தனர். இந்த டாஸ்கிற்கு சர்வைவல் டாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில் ப்ளூ டீம் வெற்றி பெறவே அனைத்து சலுகைகளையும் பெற்றுவிட்டு எதிரணியின் உணவு சமைக்கும் உரிமையை பறித்துவிடுகின்றனர். இதனால் சாப்பிடாமல் தவிக்கும் ரெட் டீம் இன்று அனைவரிடமும் சாப்பாட்டை பிடுங்கி சாப்பிடலாம் என அதிரடியாக களமிறங்கியுள்ளனர்.
அப்போது ஸ்வீட்டை சாப்பிட்டு கொண்டிருந்த டிடிஎஃப் வாசனிடம் சண்டையிட்ட ப்ளூ டீம் பச்சை கறியை சாப்பிடு என வற்புறுத்துகின்றனர். ஷாத்திகாவோ டிடிஎஃப் வாசனை எடு சாப்பிடு என்று சொல்ல, டிடிஎஃப் வாசனும் அதை கேட்டு பச்சை கறியை எடுத்து சாப்பிடுகிறார். இதனால் மொத்த ஹவுஸ்மேட்சும், ரசிகர்களும் அதிர்ச்சியடைகின்றனர்.
































