Oct 22, 2026 - 01:06 PM

பாகிஸ்தானில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இன்றைய (22) போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
இதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடவுள்ளது.
இந்த தொடரில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் தமது முதலாவது புள்ளியைப் பெறும் நோக்கில் இன்றைய தினம் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
































