Oct 22, 2026 - 01:09 PM

மழைநேரத்தில் சாப்பிட சுடச்சுட சுவையான உணவுகள் உங்கள் மனதை கவரும். இஞ்சி டீ, மசாலா சுண்டல், வெங்காய பஜ்ஜி போன்றவை மழைநேர சுவை அனுபவத்தை அதிகரிக்கின்றன.
இஞ்சி ஏலக்காய் டீ - ஜன்னலோரம் அமர்ந்து, மழைத்துளிகளை ரசித்தபடி குடிப்பதே தனி சுகம் தான்.
மசாலா சுண்டல் - தேங்காய் துருவல், மாங்காய் துண்டுடன் காரசாரமாக சாப்பிட செம டேஸ்ட்.
கார பணியாரம் - குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மொறுமொறு ஸ்நாக்ஸ்.
சுடச்சுட சோளம் சுட்டது - மிளகாய், எலுமிச்சை, உப்பு தடவி சுட்ட சோளம். மழையே பொறாமைப்படும்.
மழைக்கு ராஜானே இதுதான் - பிரட் ஆம்லெட்.
வெங்காய பஜ்ஜி - மழைச்சாரலில் தேங்காய் சட்னியுடன் சுடச்சுட சாப்பிட்டால், அதன் ருசியே தனி.
சுடச்சுட மசால் வடை - கரகரப்பாக, வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் டீக்கு சரியான ஜோடி.
பருப்பு ரசம் சாதம் + அப்பளம் - சுடச்சுட ரசம் சாதம், சூடான அப்பளத்துடன்.. அடடா!
































